எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா வட சென்னை எதிர்பார்ப்போடு ரசிகர்கள்..!!
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வடசென்னை’. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா இயக்குநர் அமீர், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
சென்னையின் வட சென்னை பகுதியை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக தயாராக்கப்பட்டு வருகின்றது.தற்போது இப்படத்தின் டீஸர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

அதையடுத்து தனுஷ் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார்கள்.இதையடுத்து படத்தில் இடம்பெறும் பிரதான கதாபாத்திரங்களின் பெயர்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டது இதில் மேலும் குஷியான தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மிரட்டலான பின்னணி இசையுடன் வட சென்னை கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் டீஸர் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர்…
கீழே உள்ள டீஸரை வாசகர்கள் தவறாமல் பார்க்கவும்..
விரைவில் படத்தின் பாடல்கள் வெளிடப்படவுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி அடுத்த மாதம் 17 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..