தெலுங்கில் முதன்முறையாக ஒரு படத்தில் நடிக்கிறார் வித்யா பாலன். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படமாகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா தந்தையின் வேடத்தில் நடிக்கிறார்.
என்.டி.ஆர். பயோபிக்’ என தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ் இயக்கும் இந்தப் படத்தை, நந்தமுரி பாலகிருஷ்ணா, சாய் கோரப்பட்டி, விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
தெலுங்கில் முதன்முறையாக நடிக்க இருக்கிறார் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.
பெங்காலி படத்தின் மூலம் 2003-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் வித்யா பாலன். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் அவர் நடித்த ‘களரி விக்ரமன்’ படன் இன்றுவரை ரிலீஸாகவில்லை. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ‘பரினீடா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டாக, பாலிவுட்டில் அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார்.
தெலுங்கைத் தொடர்ந்து தமிழிலும் வித்யா பாலன் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…