மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திருச்சி உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்தை இன்று வழங்கினார்.
இதற்கிடையே, கடந்த மாதம் 8-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் நடந்த மகளிர் மாநாட்டில் கலந்துகொண்ட, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில், இன்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருச்சி வந்த கமல்ஹாசன் அறிவித்தபடி, உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கினார். உஷாவின் கணவர் ராஜாவிடம் ரூ.5 லட்சமும் உஷாவின் தாய் நூர்து மேரியிடம் ரூ.5 லட்சமும் வழங்கினார். அப்போது உஷாவின் கணவர் கமலிடம் கதறி அழுதார். கமலும் கண்கலங்கினார்.
இதற்கு முன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள சூலமங்களத்தைச் சேர்ந்தவர் ராஜா(37). இவர் கடந்த 7-ம் தேதி இரவு, 3 மாத கர்ப்பிணியான தனது மனைவி உஷாவுடன் (34) மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.