உஷா கணவரால் கண்கலங்கிய கமல்ஹாசன்….!

Default Image

 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திருச்சி உஷாவின் குடும்பத்துக்கு  ரூ.10 லட்சத்தை இன்று வழங்கினார்.

இதற்கிடையே, கடந்த மாதம் 8-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் நடந்த மகளிர் மாநாட்டில் கலந்துகொண்ட, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில், இன்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருச்சி வந்த கமல்ஹாசன் அறிவித்தபடி, உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கினார். உஷாவின் கணவர் ராஜாவிடம் ரூ.5 லட்சமும் உஷாவின் தாய் நூர்து மேரியிடம் ரூ.5 லட்சமும் வழங்கினார். அப்போது உஷாவின் கணவர் கமலிடம் கதறி அழுதார். கமலும் கண்கலங்கினார்.

இதற்கு முன்  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள சூலமங்களத்தைச் சேர்ந்தவர் ராஜா(37). இவர் கடந்த 7-ம் தேதி இரவு, 3 மாத கர்ப்பிணியான தனது மனைவி உஷாவுடன் (34) மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.

ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பதற்காக, துவாக்குடி அருகே போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர். அவர்கள் மறித்தபோது, நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் காமராஜ் இவர்களை விரட்டிச் சென்று பெல் கணேசபுரம் ரவுண்டானா அருகே எட்டி உதைத்தார்.அப்போது, தடுமாறி கீழே விழுந்த உஷா சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜா காயமடைந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்  திருச்சியில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் , காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை என்றும் காவிரி விவகாரத்தில், 8-ம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை என்றும் ஆளுங்கட்சியின் போலியான உண்ணாவிரத போராட்டங்களால் எவ்வித நன்மையும் நடக்கப் போவதில்லை. மத்திய அரசின் எடுபிடி போல் மாநில அரசு நடந்து கொள்கிறது இன்று நடக்கும் எங்கள் பொதுக்கூட்டம் காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்கும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் சில முக்கிய துறைகளில் கொள்கைகளுக்கான கோட்பாடுகள் அறிவிக்கப்படும்.இதை மய்யமாக வைத்து அடுத்த 5 மாதங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முழு கொள்கைகளும் தயாரிக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்