உலகநாயகனின் இந்தியன் 2-வில் இணைய உள்ள மலையாள மெகா ஸ்டார்!?
2.O படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த பட வேலைகளில் மும்முறமாக இறங்கிவிட்டார். அடுத்து இவர் இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார். இதிலும் உலகநாயகன் கமலஹாசன் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் காஜல் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் நடிக்க சிம்புவிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஓர் முக்கிய வேடத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. உறுதியான தகவல்கள் பின்னர்தான் தெரிய வரும்.
source : cinebar.in