உற்சாகத்துடன் மீண்டும் களத்தில் இறங்கிய சூர்யா…!!
சூர்யாவுக்கென ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. படம் வெளியாகும் போது அவர்களின் மாஸ் என்ன என்பதை நாம் காணலாம். தன ரசிகர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவர் சூர்யா.
அவர் செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வந்தார். அண்மையில் இதன் ஒரு கட்ட படப்பிடிப்புகள் நிறைவு பெற்றது. இதனையடுத்து அவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நேற்று இணைந்துள்ளார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னை, டெல்லி, குலுமனாலி போன்ற இடங்களில் எடுக்கப்பட்டுள்ளதாம்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயீஷா நடிக்கிறார். மேலும் பிரபல நடிகர் மோகன் லால், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கவுள்ளனர்.