Categories: சினிமா

உயர்நீதிமன்றத்தில் விஷால் விளக்கம்!

Published by
Venu

நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராதாரவியை நீக்கியது பெரும்பாலான உறுப்பினர்கள் எடுத்த முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் விளக்கமளித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றதை அடுத்து, முனனாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் ராதாரவி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என விஷால் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராதாரவி நீக்கப்பட்டார்.

இதனையடுத்து, தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஷால் இன்று நேரில் ஆஜராகி, பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் எடுத்த முடிவின் படியே ராதாரவி நீக்கப்பட்டதாகவும், அது தமது தனிப்பட்ட முடிவல்ல என்றும் விளக்கமளித்தார்.

source: dinasuvadu.com

Recent Posts

“எனக்கு நான் தான் போட்டி”வெற்றிக்கு பின் பிரியங்கா போட்ட பதிவு!!

“எனக்கு நான் தான் போட்டி”வெற்றிக்கு பின் பிரியங்கா போட்ட பதிவு!!

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை…

1 min ago

பாலியல் புகாரில் கைது செய்ய இடைக்கால தடை.. விரைவில் ஆஜராகும் மலையாள நடிகர் சித்திக்.!

கொச்சி: எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட்…

31 mins ago

மீந்து போன சாதத்தை வச்சு இப்படி கூட செய்யலாமா?.

சென்னை - சாதம் மிச்சமாயிடுச்சுனா இனிமே குப்பைல போடாதீங்க ..மீந்து போன சாதத்தை வைத்து அடை செய்வது எப்படி என…

1 hour ago

சச்சினை ஓவர்டேக் செய்த ரன் மெஷின்! விராட் கோலி செய்த வரலாற்று சாதனை!

சென்னை : விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் எடுப்பதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை…

1 hour ago

“அரசியல் ஆர்வம் இல்லை”…துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் வரலாற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில்…

1 hour ago

IND vs BAN : 2-வது டெஸ்டில் வெற்றி பெற முடியுமா? யுக்திகள் என்ன?

கான்பூர் : நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில், 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதில் முதல் இன்னிங்ஸில்…

1 hour ago