உயர்நீதிமன்றத்தில் விஷால் இன்று நேரில் ஆஜர்
நடிகர் ராதாரவி, விஷால் மீது தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் விஷால் ஆஜரானார். பிறகு நீதிபதியிடம் அவர் தனது கருத்தை பதிவிட்டார்.
நடிகர் ராதாரவி நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து ராதாரவி விஷால் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதன் விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக நடிகர் விஷாலுக்கு உத்தரவிடபட்டிருன்தது. அதன்படி இன்று விஷால் உய்ரர்நீதிமன்றதில் ஆஜரானார். பிறகு, ‘நீதிமன்றத்தை வழங்கிய உத்திரவாதத்தை மீறும் எண்ணம் எனக்கு இல்லை. பொதுகுழுவில் பெரும்பான்மையானோர் எடுத்த முடிவின்படியே ராதாரவி நீக்கபட்டார்.’ என விஷால் விளக்கமளித்தார். இதனை ஏற்றுகொண்ட நீதிபதி வழக்கை ஜனவரி மாதம் 18ஆம் தேதியன்று ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.