உத்தரபிரதேசத்தில் பேட்ட படப்பிடிப்பு …!ரஜினியின் பாதுகாப்பிற்காக 25 போலீஸ் அதிகாரிகள் …!
ரஜினியின் பாதுகாப்பிற்காக 25 போலீஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது உத்தரப் பிரதேச அரசு.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதன்முதலாக நடிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. மோஷன் போஸ்டர் வெளியான இந்த படத்தின் தலைப்பு நேற்று முழுவதும் ட்ரென்ட் ஆனது.
இந்நிலையில் பேட்ட படத்தின் படப்பிடிப்பு உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
இதனால் பேட்ட’ படப்பிடிப்பில் ரஜினியின் பாதுகாப்பிற்காக 25 போலீஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது உத்தரப் பிரதேச அரசு.