உண்மை காதலுக்கு ஓர் உயர்ந்த உதாரணம் அஜித் ஷாலினி!

Published by
Dinasuvadu desk

அஜித் சினிமா திரையில் வந்தாலே போதும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அவரின் உதவி செய்யும் மனப்பான்மை, அனைவரையும் அன்புடன் மதித்தல் என நண்பர்களாகவே பலரை வைத்திருக்கிறார்.

சுயவாழ்வில் எவ்வளவு சோதனைகளை கடந்து இந்த இடத்தை பிடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அப்படியிருக்கையில் காதல் ஆசை இவரையும் விட்டு வைத்ததா என்ன?

அமர்க்களம் படத்தில் தான் இவருக்குள்ளும் அந்த காதல் இருப்பது வெளிப்பட்டது என சொல்லலாம். ஷாலினியுடன் அவரின் காதல் நீண்ட நாளாக தொடர்ந்து பயணித்தது.

இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலும், அன்பும் இருந்து வருகிறது. பெற்றோரின் சம்மதத்திற்காக காத்திருந்த இவர்கள் 2000 ஆண்டில் ஏப்ரல் மாதம் இதே நாள் சென்னையில் திருமண உறவில் இணைந்தார்கள்.

அமர்க்களம் படத்தின் போது அஜித்தால் ஷாலினிக்கு எதிர்பாராத விதமாக கையில் சிறு ரத்தக்காயம் உண்டானது. இதனால் அஜித் மிகவும் வருந்தினாராம். இது கூட அவர்களின் காதலை இன்னும் ஆழமாக்கியது எனலாம்.Image result for ajith shalini

ஓய்வின் போது அஜித் நேரில் சென்று அவரை பார்த்தாராம். அதன் பிறகு ஷாலினி அஜித்திற்கு தன் சார்பாக அஜித்திற்கு என்னென்ன பிடிக்குமோ அதை எல்லாம் வாங்கி பிறந்தநாள் பரிசாக அனுப்பினாராம்.

1999 ல் ஆகஸ்ட் மாதம் வெளியான அமர்க்களம் படம் நல்ல கமர்சியல் ஹிட். அன்றிலிருந்து இன்று வரை அஜித்தின் வெற்றிக்கு பின்னால் ஷானிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

சினிமா பிரபலங்களில் திருமண வாழ்க்கையை முறையாக வாழும் இந்த ஜோடி உண்மை காதலுக்கும், உண்மையான காதலர்களுக்கும் ஒரு உயர்ந்த உதாரணம் என்றே சொல்லலாம்..

இந்த ஏப்ரல் 24 ம் நாளில் 18 வருட திருமண வாழ்க்கை கடந்து 19 ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார்கள். எனவே மகிழ்ச்சியுடன் அவர்களை சினிஉலகம் திருமணம் நாள் வாழ்த்துக்களை அவர்களுக்கு பகிர்ந்துகொள்கிறது.

ரசிகர்களும் இதை #HappyWedAnniversaryTHALA என Tag ல் கொண்டாடிவருகிறார்கள்.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

6 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

7 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

8 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

9 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

11 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

12 hours ago