இவரு மகா நடிகன்! நல்ல மனிதன்!! மக்கள் செல்வனை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்!!!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பேட்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா ஆகியோர் உடன் நடிதுல்லானர். இப்படத்தில் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர். அந்நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஸ்டார் விஜய் சேதுபதியை வெகுவாக புகந்து பேசினார். அவர் கூறுகையில், ‘நான் விஜய் சேதுபதி நடித்த படங்களை பார்த்துள்ளேன். அவர் ஒரு சீனுக்காக மிகவும் மெனக்கெடுகிறார். அவர் மஹா நடிகன் என கூறும்போதே விஜய் சேதுபதி மேடையில் இருந்து எழுந்து வணங்கிவிட்டார்.
மேலும், விஜய் சேதுபதி மிகவும் நல்லவர். அவர் அணைத்து விசயத்தையும் வேறு கோணத்தில் பார்கிறார். வேறு விதமாக பேசுகிறார். அவரிடம் புத்தகம் படிப்பீர்களா இல்லை அதிகமாக படம் பார்பீர்களா என கேட்டதற்கு இரண்டும் இல்லை என கூறினார். அவர் மிகவும் நல்லவர் அவர் நல்ல இருக்க வேண்டும் என கூறினார். மேலும் நடிகர் சசிகுமாரும் மிகவும் நல்லவர். குழந்தைக்கு தாடி மீசை வைத்தது போல அவரது உள்ளம் இருக்கிறது என கூறினார். அவரும் நல்ல இருக்க வேண்டும் எனவும் கூறிவிட்டு சென்றார்.
DINASUVADU