இளைய தளபதி 62 அப்டேட்ஸ்!படபிடிப்பு தேதி அறிவிப்பு …….
இளைய தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றவுள்ள டெச்னீசியன்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும், சந்தானம் கலை இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த படத்தின் போட்டோ சூட் சமீபத்தில் நடைபெற்றது.
அந்த புகை படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது .தற்போது விஜயின் 62 படமான இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது …
இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62 படத்தின் பூஜை தொடங்கியது.முதல்கட்டமாக சென்னையில் 30 நாட்கள் படபிடிப்பும் ,தொடர்ந்து கொல்கத்தாவிலும் படபிடிப்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு …தீபாவளிக்கு தளபதி62 என ட்விட்டரில் ஏ.ஆர்.முருகதாஸ் சூசகமாக தெரிவித்துள்ளார் …
#Thalapathy62 #Vijay62withSunPictures #Vijay62 #Vijay @actorvijay @ARMurugadoss @arrahman #KeerthySuresh @KeerthyOfficial