இளம் படைப்பாளிகளுக்கு வாய்ப்பளிக்கும் இயக்குனர் லிங்குசாமி!
ரன், சண்டகோழி, பையா என மாஸ் ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் கடைசியாக சண்டகோழி 2 படம் வெளியாகி இருந்தது. இவர் அடுத்ததாக ஓர் தெலுங்கு படத்தை இயக்கபோவதாக செய்திகள் வெளிவருகின்றன.
இந்நிலையில் இவரது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பில் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் புதிய குறும்படம், வெப் சீரீஸ் ஆகியவை திருப்பதி பிரதர்ஸ் யூடியூப் சேனலில் பதிவிட தங்கள் மெயில் ஐடிக்கோ([email protected]), வளசரவாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என லிங்குசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
Source : tamil.cinebar.in