இறந்த தனது ரசிகரின் குடும்ப பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட நடிகர் சூர்யா!!
தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரத்தில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் தமிழ் நாட்டில் தனெக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவரின் ரசிகர் மன்றங்கள் மூலமாகவும், அகரம் தொண்டு நிறுவனம் மூலமாகவும் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் கிழக்கு பகுதி சூர்யா ரசிகர்மன்ற பொறுப்பில் இருந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 35 .இவர் அண்மையில் நுரையீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இவரின் இறப்பை அறிந்த சூர்யா ஆத்தூரில் இருக்கும் அவரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அவரின் மகளின் படிப்பு செலவை முழுவதும் தான் ஏற்பதாகவும் கூறியுள்ளார். இது அந்த குடும்பத்திற்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
source : cinebar.in