இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி 2 படம் எடுக்கலாம் என உறுதியளித்துள்ளார்….!!!
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள சர்க்கார் படமானது தீபாவளியன்று வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. இந்த படம் பல தடைகளை தாண்டி வெளியானது என்றாலும், பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். இந்த நேர்காணலில் துப்பாக்கி, கத்தி ஆகிய இரண்டு படங்களின் கிளைமாக்ஸும், அடுத்த பாகத்திற்கு லீட் கொடுக்கும்படி அமைந்திருக்கும்.
இந்நிலையில், இந்த படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளிவருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ” ஏற்கனவே பிளாக் பஸ்டர் படமான படங்களை மறுபடியும் இயக்குவது என்பது மிகவும் சவாலான விஷயம். அடுத்த பாகத்தை எடுக்க சொல்லி பொறி தட்டினால், துப்பாக்கியை எடுக்கலாம் ” என அவர் கூறியுள்ளார்.