இப்ப இருக்குற நிலைமையில திருமணமா முக்கியம்…? மீட்பு பணித்தான் முக்கியம் : களத்தில் இறங்கிய நடிகர் ராஜீவ் பிள்ளை…!!!

Default Image

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் பல நடிகை,நடிகர்களும் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளை தனது திருமண வேலைகளை நிறுத்திவிட்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க்கும் பணியில் தீவீரமாக ஈடுபட்டு வருகிறார்.

மலையாள படங்களில் சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும், மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கியவர் நடிகர் ராஜீவ் பிள்ளை. தமிழில் தலைவா படத்தில் விஜயுடனும், ஆம்பள படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
திருமணம் தள்ளி வைப்பு:

இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. அவரின் திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திருமண வேலைகளை பார்ப்பதை விடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, நிவாரண முகாம்களில் ச்ச்சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்