இன்று நடிகர் சல்மான் கான் ஜாமீன் மனு விசாரணை தள்ளிப்போக வாய்ப்பு…!
இன்று நடிகர் சல்மான் கானின், ஜாமீன் மனு விசாரணை நடைபெறவிருந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டார்.
மான்களை வேட்டையாடிய வழக்கில், சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, ஜோத்பூர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி, அவர் தாக்க செய்த மனுவின் விசாரணையை ஜோத்பூர் நீதிமன்றம், இன்றைக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், சல்மான் கான் ஜாமீன் மனுவை விசாரிக்கும் நீதிபதி உள்பட 87 நீதிபதிகள் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேறொரு நீதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்பதால், சல்மான் கானின் ஜாமீன் மனு விசாரணை சில நாட்கள் தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.