இன்று தமிழ்த் திரை உலகில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் சிகரம் தொட்ட நாகேஷின் நினைவு நாள்…!!
இன்று தமிழ்த் திரை உலகில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் சிகரம் தொட்ட நாகேஷின் நினைவு நாள் ஜனவரி 31, 2009. ‘தாமரைக்குளம்’ படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்தவர், 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார் போன்றோருடனும் தனது நடிப்பு முத்திரையை பதித்தவர். நடிகர் விஜய், அஜீத் உள்ளிட்ட இளைய தலைமுறையினருடனும் நடித்தவர். தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், தாமரை நெஞ்சம், எதிர்நீச்சல், அபூர்வ ராகங்கள், மக்கள் என் பக்கம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன் என நாகேஷின் நடிப்புத் திறனைப் பறைசாற்றும் படங்களை அடுக்கினால் பக்கங்கள் போதாது! கே. பாலசந்தர் கதைவசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து குணச்சித்ர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.