‘இனிதான் ஆட்டம் ஆரம்பம்’ அருணாச்சல பட பாணியில் சொன்ன ரஜினிகாந்த்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தொடர்ந்து அரசியலில் களமிறங்குவது குறித்து தன்னுடைய நண்பர்களிடமும், அரசியல் பிரபலங்களிடமும் ஆலோசனை நடத்திவந்தார்.பல வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டார என குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு முடிவாக கடந்த ஆண்டு இறுதியில் தான் அரசியலுக்கு வருவதை அறிவித்தார்.
இது குறித்து அவரிடம் பல வருடங்களாக ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அனைத்திற்கும் மௌனம் சாதித்த ரஜினிகாந்த், திடீரென தன் ரசிகர்களைக் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் சந்தித்த ரஜினிகாந்த், ‘‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது, காலத்தின் கட்டாயம். என தன்னுடைய முடிவைத் தெளிவாக அறிவித்தார்.மேலும் அவர் “தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை… போருக்குத் தயாராகுங்கள்” என்றும் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார்.எல்லாம் தேர்தல் கண்ணோட்டத்தோடு நடந்ததே
இந்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தனது கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் வேலையை ஆரம்பித்தார். அதன்படி அந்த நாளிலிருந்து இன்று வரை ரஜினி மக்கள் மன்றத்திற்கு 1 கோடி பேர் உறுப்பினர்களாகி உள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் போகிறது. ரஜினிகாந்தின் பெயர் தற்போது பல சிக்கலில் சிக்கியிருந்தாலும் அவரது உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் போகிறது.
தற்போது தனது உறுப்பினர்களுக்கான டார்கெட்டை 1 கோடியில் இருந்து 2 கோடியாக உயர்த்தியுள்ளார்.