இந்த தேதியில்தான் சர்க்கார் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்க உள்ளதா?!!
தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘சர்க்கார்’. இப்படம் அரசியலை மையப்படுத்தி எடுக்கபட்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதால் படத்தின் பாடல்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தற்போது வந்த தகவலின் படி படத்தின் இசை வெளியீட்டு விழாவை படு பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதியன்று வெளியாக உள்தாக தகவல் கசிந்துள்ளது.
DINASUVADU