தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 2 நிமிடத்திற்கு மேல் ஓடக்கூடிய அந்த வீடியோவில் கருப்பு உடையணிந்து முழுவதும் ஆங்கிலத்திலேயே பேசியுள்ளார்.
அவர்பேசியதாவது: ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் வாழும் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் போராடிய அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது? மக்கள் விரும்பி வாக்களித்த தலைவர் இப்போது உயிருடன் இல்லை. அவர் எப்படி இறந்தார் என்றும் இதுவரை தெரியவில்லை.
இந்த விஷயத்தில் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நமக்கு இரங்கல் செய்திகள் தேவையில்லை. இதனால் உயிரிழந்தவர்கள் திரும்பி வந்துவிட போகிறார்களா? பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது கவலையளிக்கிறது. போராடுவதற்காக மக்கள் கூடும் போது காவல் துறையினர் இப்படிதான் செயல்படுவதா? மாநில அரசு இதுவரை என்ன செய்தது? இந்த அரசு நிச்சயமாக தூக்கியெறியப்பட வேண்டும்.
இந்த பிரச்சனையில் தீர்வு காணவே விரும்புகிறேன். என்னிடம் அதற்கான தீர்வும் இருக்கிறது. அனைவருக்கும் இந்த செய்தி சென்று சேர வேண்டும் என்பதற்காகவே நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். இந்த விவகாரத்தில் அனைவரது கவனமும் திரும்ப வேண்டும். தமிழர்களுடன் மோத வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…