இந்தியா வந்ததுக்கு இதான் காரணம் ..!நான் இதான் நினைக்கிறேன் …!ஓபன் டாக் ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ் நோலன்…!

Default Image

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இந்தியா வந்துள்ள நிலையில் , இந்திய சினிமாவை பற்றி கற்றுக்கொள்ள வந்துள்ளதாக கூறியுள்ளார்.

3 பேட்மேன் படங்கள், இன்செப்ஷன், இன்டெர்ஸ்டெல்லர் உள்ளிட்ட மெகாஹிட் படங்களை இயக்கியுள்ள ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், இந்தியா வந்துள்ளார். டிஜிட்டல் முறையில் படங்கள் எடுக்கப்பட்டு வரும் நேரத்தில் செல்லுலாய்டு பிலிம் எனப்படும் பழைய முறையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியாவுக்கு வந்துள்ளார் நோலன்.

Image result for chris nolan india meeting with indian actors

டெல்லியில் அவர் ஷாருக் கான், கமல் ஹாசன் உள்ளிட்ட பல இந்திய நட்சத்திரங்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்திய சினிமா பார்த்துள்ளீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு அவர், “சில இந்திய சினிமாக்கள் பார்த்துள்ளேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் பல படங்களை பார்க்க ஆவலாக உள்ளேன்” என்றார்.

“செல்லுலாயிடு பிலிம்களை பற்றி மட்டுமல்லாமல் நான் இந்தியா வந்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு. உலகிலேயே மிகவும் சிறந்த சினிமா கலாச்சாரம் கொண்ட இந்தியாவுக்கு வந்து, இங்குள்ளவர்களை சந்தித்து பலவற்றை கற்றுக்கொள்ளும் நோக்கில் வந்துள்ளேன்” என்றார் நோலன்.

கமல் மீட்டிங் : பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை நடிகர் கமல்ஹாசன் சந்தித்ததார். இதனை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் செய்த ட்வீட்டில், “கிறிஸ்டோபர் நோலனை சந்தித்தேன். ‘டன்கிர்க்’ படத்தை, திரையரங்கில் பார்க்காமல் டிஜிட்டல் முறையில் பார்த்ததற்காக அவரிடம் வருத்தம் தெரிவித்தேன்.

Image result for kamal hassan &christopher nolan

எனது தவறுக்கான பிராயச்சித்தமாக, ‘ஹேராம்’ படத்தின் டிஜிட்டல் பிரதியை அவருக்கு வழங்கியிருக்கிறேன். அவர் நான் நடித்த ‘பாபநாசம்’ படத்தைப் அவர் பார்த்ததாக கூறியது ஆச்சரியமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு மும்பையில் நடந்தது. கோடக் நிறுவத்தின் கிளைத் திறப்பு விழாவுக்காக, பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தனது குடும்பத்தினரோடு இந்தியா வந்துள்ளார். இவரது டன்கிர்க், இந்த ஆண்டு மூன்று ஆஸ்கர்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்