இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து துவங்க வேண்டும்-கமல்

Default Image

இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து விரைவில் தொடங்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று கூறியுள்ள நடிகர் கமலஹாசன் அதற்கான பயணத்தை அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் கனரா வங்கியின் டிஜிட்டல் கிளை திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டார். அதில் உரையாற்றிய அவர் அடுத்த மாதம் தொடங்கும் அரசியல் பயணத்தில் இன்னும் நிறைய தோழர்கள் தமக்கு கிடைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதே, வரும் பிப்ரவரி 21-ம் தேதி தமது அரசியல் பயணத்தை கலாம் வீட்டில் இருந்து துவங்கப்போவதாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிப்ரவரி 24ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த நடிகர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மதுரை பொதுக்கூட்டம் என்பது புரளி எனவும் கமல் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்