இந்தியன் – 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபலம்…..!!!
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் பிரபல நடிகரான கமலஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் உடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்ததது.
இந்நிலையில், தற்போது அந்த வாய்ப்பை அவர் நிராகிரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, இதற்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியாத நேரத்தில், தற்போது ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க அழைப்பு வந்ததாகவும், ஆதலால் இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.