இது வரை வாட்ஸஅப் பயன்படுத்தாத பிரபல நடிகர் ..!
சந்தைக்கு எந்த புதிய மாடல் மொபைல் வந்தாலும் அதை வாங்க நடிகர், நடிகைகள் தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அஜித் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இன்று ஆளாளுக்கு ஸ்மார்ட் போன் வைத்துள்ள சூழலில் அஜித் கேமராகூட இல்லாத மிகச்சிறிய பேசிக் மாடல் மொபைல் போனைத்தான் பயன்படுத்துகிறாராம்.
‘சார் உங்கள் முன்னால் ஐபோன் எடுத்துப் பேசவே கூச்சமாக இருக்கிறது’ என்று சொன்ன தயாரிப்பு நிர்வாகியிடம், ‘அதைப் பயன்படுத்தவேண்டிய அவசியமும் தேவையும் உங்களுக்கு இருக்கு. ஆனால் வீட்டில் இருந்து பேசுபவர்களிடம் பேசுவதற்கு இந்த போன் போதும். அதுமட்டும் இல்லாமல் நான் வாட்ஸ்அப் பயன்படுத்துவதும் இல்லை’ என்று கூறி இருக்கிறார். அஜித்தின் புதிய பொழுதுபோக்கு துப்பாக்கி சுடுதல். மாலை வேளைகளில் துப்பாக்கி சுடுதலில் தீவிரமாக இறங்கி உள்ளார்.
தற்போது சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது.