இது பிரமாண்ட வெற்றியல்ல! டிவிட்டரில் ஷாக் அளித்த 2.O தயாரிப்பு நிறுவனம்!!
பிமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் 2.O! இத்திரைப்படம் உலகம் முழுதுவதும் பிரமாண்டமாக வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.
இது வரை 700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் இன்று டிவிட்டரில் ஓர் பதிவை போட்டுள்ளது.
அதில், 2.O திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூலை குவித்தாலும், படத்தை பார்த்த ஒவ்வொருவோரும் செல்போன் உபயோகத்தை குறைத்தால் தான் எங்களுக்கு உண்மையான பிரமாண்ட வெற்றி என குறிப்பிட்டு, செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கொலைகாரனுக என அக்ஷ்ய் குமார் பேசுவது போல போட்டோவையும் பதிவிட்டுள்ளனர்.
DINASUVADU