ஆமிர் கான் கையால் ரிலீஸ் ஆகும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரெய்லர்!
ஆமிர் கான் கமல் நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரெய்லரை ரிலீஸ் செய்கிறார்.
கமல் இயக்கி, நடித்துள்ள படம் ‘விஸ்வரூபம் 2’. ஏற்கெனவே ரிலீஸான ‘விஸ்வரூபம்’ படத்தின் தொடர்ச்சியாக இது உருவாகியுள்ளது. ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் மற்றும் கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. கமல்ஹாசன் மற்றும் அதுல் திவாரி இருவரும் இணைந்து இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கின்றனர்.
கமலுடன் இணைந்து ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மகேஷ் நாராயணன் எடிட் செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாக உள்ளது.
‘விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரெய்லர், வருகிற 11-ம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி ட்ரெய்லரை ஆமிர் கானும், தமிழ் ட்ரெய்லரை ஸ்ருதி ஹாசனும், தெலுங்கு ட்ரெய்லரை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிடுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.