ஆந்திராவில் முதல் நாள் இத்தனை கோடி வசூலை ஈட்டியுள்ளதாம் 2.O பிரமாண்டம்!!!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் 2.O. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் 450 கோடி ரூபாயில் பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டிருந்தது.
இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் படத்திற்கு அனைத்து இடங்களிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது. இப்படம் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டு ஆந்திராவில் மட்டும் 19 கோடி ரூபாய் வசூலை முதல் நாளில் ஈட்டியுள்ளது.
source : cinebar.in