ஆக்சன் அவதாரம் எடுக்கும் நயந்தாரா..!!
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்க படும் நடிகை நயன்தாரா தனக்கென்று தனி இடத்தை ரசிகர் மத்தியில் பிடித்து விட்டர் என்று தான் சொல்ல வேண்டும் இவர் கதாநாயகியாக நடித்த படங்களை விட இவர் தனித்து நடித்த படங்கள் இவரை யார் என்று அடையாள படுத்தியது.இதில் அறம் குறிப்பிடத்தக்கது இப்படம் ரசிகர்களின் முழு ஆதரவை பெற்று தந்தது.
இதனை தொடர்ந்து இவர் தற்போது இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொண்ட படங்களில் நடிப்பதை ஆர்வம் கொண்டுள்ளார்.அதில் இவர் நடித்து வரும் படம் இமைக்கா நொடிகள் இப்படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் வில்லானாக நடித்துள்ள அனுராக் காஷ்யப்பை துரத்தும் காட்சிகளில் வில்லனுக்கும் இவருக்கும் உள்ள ஆக்சன் காட்சிகளில் அசத்தி உள்ளாராம் நடிகை நயன்தாரா. நயந்தாராவின் ஆக்சன் அவதாரத்திற்கு அஸ்திவாரம் போட்டுள்ளது இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.