பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை சுருதி ஹரிகரன் மீது நடிகர் அர்ஜூனின் மாமனார் கன்னட திரைப்பட வர்த்தகசபையில் புகார் அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், இந்த பாலியல் புகாரால் தனது மருமகன் அர்ஜூனின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
புகார் வழங்கிய பிறகு ராஜேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகை சுருதி ஹரிகரன் கூறியுள்ள பாலியல் புகாரால், எனது மருமகனின்(அர்ஜூன்) புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. இது எங்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கன்னட திரைப்பட வர்த்தகசபையில் புகார் கொடுத்துள்ளேன்.இதுகுறித்து நடிகர்கள் சங்க தலைவர் அம்பரீசுடன், திரைப்பட வர்த்தகசபை நிர்வாகிகள் கலந்து ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் தீர்வு கிடைக்காவிட்டால், நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம். அர்ஜூனுக்கு கன்னட திரையுலகம் மட்டுமின்றி, 6 கோடி கன்னடர்களின் ஆதரவும் உள்ளது. அர்ஜூன் மீதான பாலியல் புகாருக்கு பின்னணியில் சதி இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதுபற்றி என்னால் உறுதியாக சொல்ல முடியாது. இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
DINASUVADU
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…