அண்மையில் ‘தமிழ்படம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியானது.
ரஜினி – ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘2.0’ . இந்த தலைப்பை ‘தமிழ்படம்’ இரண்டாம் பாகத்தில் சேர்த்து அட்ராசிட்டி செய்துள்ளார் இயக்குநர் சி.எஸ். அமுதன். படத்தின் முதல் போஸ்டரில் டிசம்பர் 11ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் 25.05.2018 அன்று படம் ரிலீசாகும் என்றும் அதற்கு அடுத்த நாளே (26.05.2018) தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாகும் என்றும் குறிப்பிட்டு அசத்தியுள்ளது படக்குழு. மேலும் ‘Official Piracy Partner – தமிழ் ராக்கர்ஸ்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
தமிழ் ராக்கர்ஸ், 2.0.. இவற்றை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டு அரசியலை கலாய்த்து மற்றொரு போஸ்டரை வெளியிட்டுள்ளது ‘தமிழ்படம் 2.0’ படக்குழு. துணைமுதல்வர் பன்னீர்செல்வம் மெரினாவில் யாகம் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஓபிஎஸ் போன்று சிவா அமர்ந்து யாகம் செய்வதுபோன்ற காட்சி போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது!
கடந்த 2010ம் ஆண்டு சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’ பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்படங்களையும் , நடிகர்களையும் கிண்டல் செய்து நகைச்சுவை காட்சிகளை அமைத்திருந்தார் இயக்குநர் சி.எஸ். அமுதன்.
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…