நடிகர் விஜய்க்கு எவ்வளவு ரசிகர்கள் உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளனர். ஜெயலலிதா இறந்த பிறகு உள்ள வெற்றிடத்தை நிரப்பபோவது இவர்கள் இருவரில் யார் என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி.
இது ஒரு புறமிருக்க மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வரலாம் என்ற பேச்சும் வந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பேட்டியில் விஜய் தன் சீனியர்கள் ரஜினி-கமலுக்கு வழிவிட வேண்டும் என கூறியுள்ளார்.
“விஜய் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் குழந்தை அல்ல. நல்லது கெட்டதைத் தீர்மானிக்கும் வயது அவருக்கு வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. சீனியர்கள் என்ற முறையில் கமலும் ரஜினியும் அரசியலில் இறங்கிவிட்டார்கள். அந்த சீனியர்களுக்கு விஜய் வழிவிடலாம் என்றே தோன்றுகிறது” என கூறியுள்ளார்.
விஜய் அரசியலுக்கு வரகூடாது என்பதையே எஸ்.ஏ.சி இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…