அழகை தேடி ஆபத்தில் விழுந்த பிரபல சீரியல் நடிகை…!!! அழகுக்காக உதடு அறுவை சிகிச்சை செய்த நடிகை : அலங்கோலமான சம்பவம்….அதிர்ச்சியாக்கிய புகைப்படம்..!!!
நடிகைகள் அழகுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக அதிக நேரமும், பணமும் செலவிடுகிறார்கள். அந்த வகையில் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்பவர்களும் உண்டு.
சில மாதங்களுக்கு முன் இளம் நடிகை ஆஷ்கா கொரிடா உதட்டை அழகுபடுத்துவதற்க்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனால் அதன் பிறகு அவரை பார்த்து கேலி, கிண்டல் செய்தனர்.
சமூக வலைத்தளங்களில் கூட விமர்சனங்கள் பறந்தன. ஆனால் அவர் அதற்கு எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. பின் அவர் தன் நீண்ட நாள் நண்பரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அவர் விமர்சனங்கள் குறித்து பதில் தெரிவித்துள்ளார். எனது கணவர் என்னை மறைப்பதற்கு ஏதும் இல்லை என உணரவைத்துவிட்டார். மக்கள் என்னை அவமானப்படுத்தினாலும் அதில் வெட்கப்பட எதுவுமில்லை.
சில நேரங்களில் வாய் திறக்க வேண்டியுள்ளதுஎன கூறியுள்ளார். ஆஷ்கா நாகினி சீரியலில் நடித்தவர்.