நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் சர்ச்சை குறித்து நடவடிக்கை கோரி டாப் லெஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர். அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. மாறாக கைது செய்யப்பட்டதுடன், நடிகர் சங்கத்தில் அவரது உறுப்பினர் படிவம் நிராகரிக்கப்பட்டது.
அவர் குடியிருந்த வீட்டிலிருந்தும் வெளியேற வீட்டு உரிமையாளர் கூறியிருக்கிறார். ஆனாலும் விடாப்பிடியாக முரண்டுபிடித்து வருகிறார் ஸ்ரீரெட்டி. என்னை பாலியல் தொல்லை செய்தவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
‘தாம் தூம்’ பட ஹீரோயின் கங்கனா ரனாவத் கடந்த ஆண்டு நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது தன்னை காதலித்து ஏமாற்றியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறியதுடன் போலீசில் புகார் அளித்தார். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். அவர் நடிகை ஸ்ரீரெட்டியின் போராட்டம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கங்கனா கூறியது:
ஒரு விஷயத்துக்காக போராடுகிறோம் என்றால் அந்த பிரச்னைதான் பெரிதாக்கப்பட வேண்டுமே தவிர அதை சொல்லும் நபர் அல்ல. ஸ்ரீரெட்டிபோல் போராட்டம் நடத்துவது எந்த பயனையும் தராது. மாறாக அவருக்கு எதிராகவே அது முடியும். ஆடைகளை களையும் போராட்டத்தை அவர் நடத்தியிருக்கக்கூடாது. அவர் சொல்வதுபோல் நடிகைகளை பாலியல் தொல்லையில் சிக்க வைக்கும் காஸ்டிங் கவுச் பிரச்னை சினிமாவில் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
திரையுலகில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இதுபோன்ற போராட்டங்கள் அவமானகரமானது என எண்ணுவார்கள். அதற்கு ஆதரவாக பேசவும் மாட்டார்கள். காரணம், ஸ்ரீரெட்டி தேர்வு செய்த போராட்ட முறை அப்படிப்பட்டது. தனது பிரச்னையை எடுத்து சொல்ல எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அதில் சரியான வழியை அவர் தேர்வு செய்து போராட வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…