விவசாயிகள் காவிரி நீரை வைத்து தான் வாழ்ந்து வந்தார்கள்.இது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறுகையில் , ஆனால் இப்போது அரசியல்வாதிகள் அதில் தான் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என தமிழகம் மற்றும் கர்நாடக மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்றம் தீர்பளித்தும், மத்திய அரசு கர்நாடக தேர்தலை காரணம் காட்டி காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு நாட்களாகவே பல்வேறுகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் மேலாண்மை வாரியம் அமைக்கவிட கர்நாடகாவிலும் சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
காவிரி நீரை வைத்து நீண்ட நாட்களாக சண்டையிட்டு கொண்டிருக்கும் தமிழக மாற்று கர்நாடக மக்களுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், காவிரி பிரச்சனை என்பது ஏதோ நீராதார பிரச்சனை மட்டுமல்ல. பல லட்சம் மக்களின் வாழ்வாதரப்பிரச்சனை. இதனை மத்தியிலும், மாநிலங்களிலும் ஆளும் கட்சிகள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக மக்களை பிரித்து வாக்குவங்கியாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டு கொள்ளக்கூடாது என்பார்கள். ஒரு நதிநீரை குடித்து அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டு கொள்வதும் முறையல்ல. தாய்ப்பாலும் நதிநீரும் வேறு வேறு அல்ல. நதி நீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…
சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள…
சென்னை : பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகளும் மாடு பிடி வீரர்களுக்கு மத்தியில் அதிகமாகியுள்ளது என்று கூறலாம்.…