அரசியலில் அவசியம் ஏற்பட்டால் ரஜினியையும் எதிர்க்க தயங்கமாட்டேன். ரஜினியை எதிர்க்கும் நிலை வரக் கூடாது என்றும் விரும்புகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
திருச்சி பொன்மலை பகுதியில் மக்கள் நீதி மய்ய மாநாடு நாளை நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருச்சி புறப்பட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
இந்த பயணத்தின் போது கமல்ஹாசன் ஆங்காங்கே மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். அதற்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதையடுத்து ரெயில் நிலையங்களில் சந்திக்கும் திட்டத்தை கமல் ரத்து செய்தார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தொண்டர்கள் திரளாகக் கலந்துக் கொள்ளும்படி நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
பயணத்தின் போது அவர் கூறியது, மக்களுடன் பயணிக்க வேண்டும் என்ற ஆவலில் ரயிலில் செல்கிறேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உண்ணாவிரதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை என்றும் தெரிவித்தார்.காவிரி மேலாண்மை வாரியத்திற்காக ஒத்துழையாமை இயக்கம் நடத்தினாலும் தகும். ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் அளவிற்கு தமிழர்களை தள்ளிவிடக் கூடாது. தமிழர்களின் அமைதியான போராட்டம், அமைதியான முறையிலேயே முடிவடைய வேண்டும்.அரசியலில் அவசியம் ஏற்பட்டால் ரஜினியையும் எதிர்க்க தயங்கமாட்டேன். ரஜினியை எதிர்க்கும் நிலை வரக் கூடாது என்றும் விரும்புகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…