நடிகை ஸ்ரீரெட்டி சொல்லும் விவரங்கள் உண்மைதான் என்று நினைக்கிறேன் அவை நம்பும் படியாக உள்ளது உள்ளன என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.அவர் தந்து முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் பின்வருமாறு .
இன்றுதான் நான் # SriReddy யின் இணையதள பேட்டியை பார்த்தேன். சினிமா ஆசை காட்டி தங்கள் ஈனபுத்திக்கு பெண்களை இரையாக்கிக்கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கபோட்டுக்கொண்டிருக்கிறார். மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார். இவர் கூடவா என்று சிலர் பெயரை கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது, ஆனால் அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன.
# SriReddyயின் நிலை நமக்கு உணர்த்துவது இதைத்தான் –
லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம்.
கொடுப்பதே லஞ்சம், இதில் கொடுத்த லஞ்சத்துக்கு வாங்கியவர்கள் உண்மையாக இல்லை என்று பிறகு கூப்பாடு போடுவது .. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் இல்லையா? அதிலும், ஒரு ஊரில் பல பேரிடம் ஏமாந்து, பிறகு அடுத்த ஊரிலும் அதே தவற்றையே மறுபடி மறுபடி செய்வதற்கு பெயர் என்ன?
குறுக்குவழி ஏமாற்றம் நிறைந்தது. அதில் பலமுறை பயணித்திருக்கிறார் இவர். ஒருமுறைகூட அந்த வழி பயன்தரவில்லை. அப்புறமும் தன் அணுகுமுறை தவறு என்று ஏன் இந்தப்பெண் உணரவில்லை? அப்படியென்றால், சினிமாவுக்கு தேவையான தகுதியோ திறமையோ தனக்கு இல்லை, சமரசங்கள் செய்தாலாவது வாய்ப்பு கிட்டாதா என்று அந்த பெண் யோசித்ததாகவே தெரிகிறது. தகுதிக்கு மேல் பேராசைப்பட, சமரசம் செய்யக்கூட ஒரு மனநிலை வேண்டும்.. எல்லோருக்கும் அது கைகூடாது. திருடி தின்பது சுலபமென்றால் எல்லோரும் திருடர்களாத்தான் இருப்பார்கள். நேர்வழிதான் கடைசியில் நிலைக்கும் என்பதை பட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை. நம் முன்னோர்கள் நமக்கு அதை சொல்லித்தந்து போயிருக்கிறார்கள். அந்த ஒழுக்கத்தை கடைபிடித்தால் வாழ்க்கையில் ஜாக்பாட் அடிக்காமல் போகலாம், ஆனால் என்றும் சீராக, இழப்பில்லாமல் செல்லும்.
ஸ்ரீ ரெட்டி செய்த மிக பெரிய தவறு என்ன என்று அவர் இன்று வரை உணர்ந்தாரா தெரியவில்லை. அவர் சினிமாவில் உள்ள ஆண்களை தவறாக எடைபோட்டு ஏமாந்ததாக நினைத்துக்கொண்டிருக்கிறார். இல்லை. அவர்,தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான் . எல்லா நடிகைகளும் படுத்துதான் சினிமாவில் முன்னேறியுள்ளார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார். சான்ஸ் கிடைத்திருந்தால் யார் முகத்திரையையும் கிழித்திருக்க மாட்டார்.சினிமாவை மிக தவறாக எடைபோட்டதன் விளைவையே இப்பொழுது சந்தித்துக்கொண்டிருக்கிறார் .
படுத்தால் சான்ஸ் கிடைக்கும் என்று அவர் நினைத்தது மிக பெரிய முட்டாள்தனம் மட்டுமல்ல, திறமையையும் உழைப்பையும் ஒழுக்கத்தையும் மூலதனமாக வைத்து முன்னேறிய என்னை போன்ற நடிகைகளுக்கு எவ்வளவு அவதூறு ! என்று கூறினார்.
மேலும் செயரெட்டி தனது பக்கத்தில் ” அம்மா(ஜெயலலிதா) உயிரோடு இருந்தால், நான் நீதி பெற முடியும்.. ஒரு பார்வை என்னை காப்பாற்ற வேண்டும்.. அம்மா இந்த பெண்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்.. ” என்று கூறினார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…