அமெரிக்காவில் மட்டும் இத்தனை திரையரங்குகளில் வெளியாக உள்ளதா 2.O?! இந்திய படங்களில் நெ.1!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்த வாரம் ரிலீஸாக உள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தின் தியேட்டர் உரிமை வியாபாரம் விண்ணை முட்டும் அளவிற்கு நடைபெற்று வருகிறது. இப்படம் அமெரிக்காவில் மட்டும் 300க்கும் அதிகமான திரையரங்கில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய படங்களிலேயே இதுதான் அமெரிக்காவில் அதிக திரையரங்கில் வெளியாகும் திரைப்படமாகும்.
source : cinebar.in