அப்பிடி போடு…..! மீண்டும் முதலிடம் பிடித்த ஷங்கர்…!!!
ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரானது. அப்போதைய நிலவரப்படி இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படமாக இது பார்க்கப்பட்டது. அதன்பின்னர் பல படங்கள் ஹிந்தியில் 100 கோடி பட்ஜெட்டில் தயாரானது.
அதாவது, பாகுபலி-1,பாகுபலி-2 ஆகிய படங்கள் ரூ.300 கோடியில் தயாரானது. அதனால் இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் படமெடுத்த இயக்குனர் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த சங்கரை பின் தள்ளில் முதலிடம் பிடித்தார் ராஜமௌலி. இந்த நிலையில் தற்போது ரஜினி-அக்சய்குமார் நடிப்பில் சங்கர் இயக்கி வரும் 2.0 படம் ரூ.545 கோடியில் தயாராகியுள்ளது.
அந்த வகையில், ராஜமவுலியை வீழ்த்தி மீண்டும் இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் படமெடுத்த இயக்குனர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் பிரமாண்ட இயக்குனர் சங்கர்.