கனா படத்துக்காக சிவகார்த்திகேயன் தனது மகளுடன் பாடிய ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் 5 கோடி பார்வையாளர்களை கவர்ந்து சாதனை புரிந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது புரொடக்ஷன் சார்பில் தயாரித்து வரும் படம் கனா. இந்த படத்தை அவரது நண்பரும், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவருமான அருண்ராஜா காமராஜா இயக்கியிருக்கிறார்.இந்த படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை தனது மகள் ஆராதனா மற்றும் பிரபல பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மியுடன் இணைந்து பாடியுள்ளார் சிவகார்த்திகேயன்.இந்த பாடலின் துள்ளல் இசையும், சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா கொடுத்த கியூட்டான ரியாக்ஷன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தற்போது இந்த பாடல் யூடியூபில் வெளியான ஒரே மாதத்தில் இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது,
தந்தை, மகள் உறவை சொல்லும் இந்த பாடல், என் மகள் ஆராதனாவுடன் எனக்கு இருக்கும் உறவை காலம் முழுக்க நினைக்க வைத்துள்ளது. இப்போது யூடியூபில் 50 மில்லியனை தாண்டியிருப்பதும், பலருக்கு பிடித்தமான பாடலாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் பாடலை பாடிய வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கு நன்றி. ஆராதனாவின் அழகிய குரல் இந்த பாடலின் இனிமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னையும், என் மகள் ஆராதனாவையும் ஒரே பாடலில் இணைத்த இயக்குனர் அருண்ராஜா காமராஜாவுக்கு நன்றி.
இது இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மற்றும் பாடலாசிரியர் ஜி.கே.பி ஆகியோரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றார்.
DINASUVADU
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…