அப்படி நடித்தால் இவருடன்தான் நடிப்பேன் : யார் அந்த நடிகர்..!
காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மகனாக நடித்தவரின் காதலியாக நடித்தவர் புயல் சாருமதி என்னும்இந்தி நடிகை அஞ்சலி பாட்டீல். ஒரு பேட்டியில் ‘தமிழில் எந்த நடிகர்களோடு நடிக்க விரும்புகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டதற்கு’ பலர் இருக்கிறார்கள். முக்கியமாக விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்று அவர் கூறின. சூது கவ்வும் நடிகர் இவரையும் கவ்வினார் போல.
அவருடைய படங்களைப் பார்த்ததில்லை. ஆனால், நண்பர்கள் பலரும் அவரைப் பற்றி அவருடைய வித்தியாசமான படத்தேர்வுகள் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள். எனவே அவருடன் நடிக்க விருப்பம்’ என்று கூறி இருக்கிறார்.
அஞ்சலி பாட்டீல் அடுத்ததாக ஆவணப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் மராத்தியில் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இரண்டு தமிழ்ப்படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.