அனைத்து ரசிகர்களையும் கொண்டாட வைத்த நடிகர்…!!! அது யாருப்பா…?
சிவகார்த்திகேயன் தற்போது சினிமாவில் வேற லெவல் என பலரும் சொல்வார்கள். அவருக்கான முக்கியத்துவம் கூடிவிட்டது. அணைத்து தரப்பிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அவரை நடிகராக அறிமுகப்படுத்தியது இயக்குனர் பாண்டி ராஜ் தான். சிவா அடுத்தடுத்து படங்கள் எல்லாம் வெற்றி படங்களாக இருக்கின்றன.
வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சீமாராஜா படம் வரும் செப்டம்பர் 13ல் வெளிவரவுள்ளது. இப்படத்தை போன் ராம் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் சிவா, சூர்யா காம்பினேஷன் கொடுத்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை மறக்க முடியாது.
இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. காமெடிகளை, பாடல்களும் இப்பொது எவர் கிரீன் தான். இப்படம் தற்போது 5 வருட கொண்டாட்டத்தை நேற்று எட்டியுள்ளது.