அனிருத் வெளியிடும் ஜி.வி.பிரகாஷ் படத்தின் பாடல்! 'பீட்டர் பீட்டு ஏத்து'!!
தமிழ் சினிமாவின் பிஸியான நடிகரான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் இயக்கி உள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 28இல் படம் ரிலீசாக உள்ளது.
இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றையும், ஒவ்வொருவராக ரிலீஸ் செய்து வருகின்றனர். கடைசியாக மாயா மாயா எனும் பாடலை ஐஸ்வர்யா ராய் வெளியிட்டிருந்தார். தற்போது அடுத்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளார். இப்பாடல் டிசம்பர் 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. தெலுங்கில் இந்த பாடலை இசையமைப்பாளர் தமன் வெளியிட உள்ளார்.
DINADUVADU