அதற்கு மறுத்ததால் அதை இழந்தேன்..! கதறி அழுத்த நடிகை..!
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் கவண்.
மடோனா செபாஸ்டியன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகியாவார்.2015ஆம் ஆண்டில் அல்போன்சா புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார்.
மடோனா செபாஸ்டியன் அளித்த பேட்டியில் : நான் புதிதாக எதையாவது கற்றுக்கொண்டே இருக்க விரும்புவேன். எனவே மொழி பிரச்சினை இல்லை என்றும் எனது கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நான் கதையை தேர்வு செய்கிறேன்.லிப்லாக் முத்தத்திற்கு மறுத்ததால் கடந்த 3 மாதங்களில் 3 படங்களை இழந்துள்ளேன். அதற்கு எல்லாம் இப்போது நான் தயாராக இல்லை. கட்டிப்பிடிக்கும் காட்சியில் முதல்முறை நடித்தபோது அம்மாவுக்கு போன் பண்ணி அழுதிருக்கிறேன். நான் கூச்ச சுபாவம் கொண்டவள். என்றும் கூறினார்.