அட….ச்சா….! இப்பிடி பண்ணலாமா…? சம்பளத்தை கொடுக்கும் போது சந்தோசமா கொடுக்கனுங்க….!!!
இந்திய சினிமா துறையில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் பணியாற்றியுள்ளார்.
படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது திரைக்கு வர தயாராகி வருகிறது. விஜய் சேதுபதி, இந்நிலையில் தற்போது டுவிட்டரில் அவர் சர்ச்சையான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் ஹீரோயினுக்கு சம்பளம் கொடுக்கும்போது மட்டும் சந்தோசமாக கொடுப்பதாகவும், அதுவே டெச்னிஷியனுக்கு கொடுப்பதென்றால் கடுப்புடன் கொடுப்பதாக ஒரு மீம் அவர் ட்வீட்டரில் போட்டுள்ளார்.
இதனால் என்ன பிரச்சனை? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.