Categories: சினிமா

எங்கிருக்கிறது..? அட்மின் யார்…? URL என்ன..? தமிழ் சினிமாவை நடுங்க செய்யும் தமிழ்ராக்கர்ஸ்….

Published by
Dinasuvadu desk
தமிழ்சினிமா உலகையே நடுங்க வைக்கும் தமிழ்ராக்கர்ஸ் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
தமிழ் சினிமா பிரபலங்களை நடுங்கவைத்து கொண்டு இருக்கும் தமிழ்ராக்கர்ஸ்  அடிக்கடி  சவால் விட்டு பெரிய நடிகர்களின் படங்களை கசியவிட்டு வருகிறது. தொலைதூரத்தில் இருந்து இயங்கும் இந்த இணையதளம்  மிகவும் தெளிவான காட்சிகளுடன் வீடியோக்களை வெளியிடுகிறது. இந்த இணையதளம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் வருமானத்தை கெடுக்கிறது. புதிய படங்கள் வெளியாகும் அன்று தியேட்டருக்கு சென்று ரூ120- 200 கொடுத்து பார்க்க விரும்பாதவர்களுக்கு  தமிழ்ராக்கர்ஸ் இத்தைகைய வீடியோக்களை வெளியிடுகிறது.
நடிகர் விஜயின் சர்க்கார் படத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் சவால் விட்டு படம்  வெளியான அன்றே தனது இணையதளத்தில் மொத்த பட வீடியோவையும் கசிய விட்டது.தமிழ் திரைத்துறையினருக்கு பெரும் சவாலாக ‘தமிழ் ராக்கர்ஸ்’ உள்ளது. புதிய திரைப்படங்கள் வெளியாகும் அதே தினத்தில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்திலும் அது வெளிவந்து விடுவதால் திரைத்துறையினருக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
‘தமிழ் ராக்கர்ஸ்’ நிறுவனம் எங்கிருந்து செயல்படுகிறது, இதன் அட்மின் யார், அதற்கு எப்படி பணம் கிடைக்கிறது, அவர்களை ஏன் தடுக்க முடியவில்லை என்பது போன்ற கேள்விகள் அனைவருக்கும் இயல்பாகவே எழுவதுண்டு.விளம்பரம் மூலம்தான் அவர்கள் மாதம் ரூ.10 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். இந்த விளம்பர கம்பெனியை தொடர்பு கொண்டு சைபர் கிரைம் காவல்துறையினர் தமிழ் ராக்கர்ஸ் குறித்து கேட்டுள்ளனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
செல்போனில்கூட திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் தொழில்நுட்பம் வந்த பிறகுதான் தமிழ் ராக்கர்ஸ் அசுர வளர்ச்சி அடைந்தது. தமிழ் ராக்கர்சில் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.
பல வழக்குகள் மற்றும் போலீஸ் நடவடிக்கை இருந்தபோதிலும், இந்த இணையதளம் அனைத்தையும் மீறி புதிய படங்களை வெளியிட்டு விடுகிறது.  இது எப்படி தமிழ் ராக்கர்சால் முடிகிறது. அது எப்படி இயக்குகிறது.உலகளாவிய ரீதியில் இதன்  உறுப்பினர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பங்களிப்பு செய்துள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் திரையரங்குகளில் இந்த படங்களின் வீடியோ பதிவு செய்த பிறகு ‘திரைப்படத்தை பதிவேற்றலாம். ஒவ்வொரு உறுப்பினரும்  எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட வீடியோ பதிவு  பணிக்காக பணம் செலுத்துகின்றனர்.
வலைத்தளமானது அதன் யுஆர்எல்-ஐ மாற்றியமைத்து கொள்கிறது. ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட யுஆர்எல் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வலைத்தளம் இன்னொரு யுஆர்எல்-க்கு மாறுகிறது, இதனால் தமிழ்ராக்கர்ஸ்  அட்மினை கண்டுபிடிக்க முடியவில்லை.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

1 hour ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

3 hours ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

4 hours ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

4 hours ago

கல்யாண வீட்டு ஸ்பெஷல்..மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?.

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  பார்க்கலாம்.…

5 hours ago