அடேங்கப்பா…! என்ன ஒரு சாதனை…! இந்தியர்களின் வரவேற்பை பெற்ற 2.0 டீசர் :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 2.0 டீசர் இன்று வெளிவந்துள்ளது. இந்த டீசர் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.
இந்நிலையில் இந்த டீசர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவந்துள்ளது. இந்த டீசர் வெளிவந்த 4 மணி நேரத்தில் தமிழில் 2.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
அதேபோல் தெலுங்கில் 1.8 மில்லியன், ஹிந்தியில் 1.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இதுமட்டுமன்றி தமிழில் 2.4 லட்சம் லைக்குகளை தெலுங்கு, ஹிந்தியில் 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பற்று வசதியுள்ளது.