அடடே ரெஜினா இப்படி ஒரு கதாபாத்திரத்திலா களமிறங்கி உள்ளார்….?
ரெஜினா கசண்ட்ரா, ஏக் லட்கி கோதேக் காதா ஐசா லகா என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆகிறார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இவர் இந்த படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை ரகசியமாகவே வைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியானபோது தான் சோனம் கபூரும், ரெஜினாவும் இதில் ஓரின சேர்க்கையாளராக நடிக்கிறார்கள் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், ரெஜினாவின் இந்த துணிச்சலான முயற்சிக்கு விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் ரெஜினா அமைதியாக இருந்தார். தற்போது ரெஜினாவுக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தைரியம் வேண்டும். இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது என்ற ரீதியில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் ரெஜினாவை பாராட்டி வருகிறார்கள்.