அடடே… ஜெயம் ரவியுடன் டூயட் காஜல் அகர்வால்…!!!
ஜெயம் ரவி தற்போது அடங்க மறுபடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்து வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க மோகன் ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அடங்க மாரு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, தனி ஒருவன்-2 வில் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாக இருக்கும் மற்றோரு படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று ஜெயம் ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளது.
அதாவது ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருக்கிறது என்றும் இந்த படைத்த வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் என்றும் ஒரு வீடியோ பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோ பதிவில் பிரபல கதாநாயகி காஜல் அகர்வால், பிரபல இசை அமைப்பாளர் என்று இப்படத்தில் பல பிரபலங்கள் பங்குபெற இருக்கிறார்கள் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அத்துடன் இது ஜயம் ரவியின் 24-வது படம் என்றும் குறிப்பிட்டுள்ளது.