விஸ்வாசம் படத்தின் இரண்டாம் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஜித்-இயக்குநர் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.
நடிகர் அஜித்தின் 58-வது படமாக உருவாகி வரும் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படம் பொங்கலுக்கு வெளியாவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
ஃபர்ஸ்ட் லுக்கை கொண்டாடிய அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக காத்திருந்தனர். இதேபோல் விஸ்வாசம் திருவிழா என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி படத்தின் அப்டேட்டை வெளியிட படக்குழுவுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று விஸ்வாசம் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித் வேட்டி சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை தமிழர் திருநாள் வாழ்த்துகள் மற்றும் விஸ்வாசம் திருவிழா என்ற ஹேஷ் டேக்குடன் வெளியிட்டிருந்தார்.இந்த ஹேஷ்டேக் வெளியான சில நிமிடங்களில் வைரல் ரெண்டிங்கானது. இதையடுத்து நாளை படத்தின் இரண்டாம் லுக் வெளியிடப்படும் என்று நடிகர் அஜித்தின் மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் விஸ்வாசம் பொங்கலுக்கு பொலக்க வருவது உறுதியானது.மேலும் காத்துகொண்டிருந்த ரசிகர்களுக்கு படுகுஷியை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…